காலம் இப்படி
மாலையில் நான் பிரிஸிடென்ஸி காலேஜிலிருந்து மேற்கு நோக்கி கடற்கரை ஓரமாக நடந்துச் சென்றுக் கொண்டு இருந்தேன். என் மனதில் பல எண்ணங்கள்.
எங்கள் ஊர் தென்னை
மரக்காற்று எங்கே?… இந்தக் கடற்கரைக் காற்று எங்கே?... வயலின் பசுமை என்ன? இங்குக்
கடலின் பரந்த பரப்பு என்ன? என்று நினைத்துக்
கொண்டு சென்றவன் மூளைக்கு அதிர்ச்சி ஒன்று உண்டாக்கியது.
மணி… என்ற ஒரு
குரல் காற்றோடு கலந்து என் செவியின் மூளையைத் தாக்கியது. திரும்பிப் பார்த்தேன்…
அங்குத் தன் முத்துப்
பல்லை வரிசையாக்கி, உதடை அகல விரித்து, கண்களை மின்மினிப் பூச்சியாக்கி அந்தப் பாவையாள்
என்னைப் பார்த்து நகர்ந்து வந்தாள்… நான் அதிர்ச்சியடைந்தேன்.
ஆமாம்… ஒரே வகுப்பில்
படித்து, பழகியவர்கள் பிரிந்து, தற்செயலாக அதுவும் சென்னையில் தன் பக்கத்தாரைத் திடீரென்று
பார்த்தால் அதிர்ச்சி தானே…
என்ன… மணி அப்படி
பார்க்கரே… நான் தான் காமேஸ்வரி… என்று சொல்லிவிட்டு அவள் அவளுடைய தோழிகளுடன் என்னை
அறிமுகப்படுத்தினாள்… நான் பேச்சுக்காக…
வணக்கம் என்றேன்…
அழைத்தவள் என்ன
பேசுவது என்று தெரியாமல் தோழிகளையும் என்னையும் மாறி மாறிப் பார்க்கிறாள்…
என்னடி காமு…
நாங்க உங்களுக்கு இடைஞ்சலா இருக்கோமா… என்று கேட்டாளே ஒருத்தி.
அதெல்லாம் ஒண்ணுமில்லே
நீலு என்றாள் காமு…
பாடம் எல்லாம்
எப்படி நடக்கிறது. செமஸ்டருக்கு ரெடியா? என்று மெல்ல பேச்சைத் தொடர்ந்தேன்…
உம்… என்று பெருமூச்சு
இரைத்தாள் காமு…
என்ன பெருமூச்சு
பார்த்தால் பாடம் எல்லாம் ஆறு போல இருக்கு என்றேன்…
இது புரியாத அவர்கள்
பேந்த பேந்த விழித்தார்கள்.
ஆறு தெரியாது…
ஸிக்ஸ் ஒன்லி என்றேன்.
மணி தெளிவா சொல்லுங்க
என்றாள் தோழிகளில் ஒருத்தி.
மணி அந்த சிக்ஸ்
பத்தி ஒன்றும் சொல்லவில்லையே…
அது தெரியாதவங்க
இந்த மாறி கதை புக் படிக்கக் கூடாது என்று காமுவின் கையில் இருந்த லவ் ஸ்டோரியை எடுத்துக்
காண்பித்தேன்…
அதற்கும் இதற்கும்
என்றாள் நீலு…
நீங்கள் எல்லாம்
நைன் என்றேன்…
நீங்க சொல்லுவது
புரியலேயே என்றாள் காமு…
அப்படி என்றால்
இதை உங்கள் சீனியாரிட்டி கிட்டவே கேட்டு தெரிஞ்சுக்கோங்கோ… என்று நடையைக் கட்டினேன்… அப்போது,
என்னடி காமு…
பிடிச்சாலும் புளியங்கொம்பா தான் பிடிச்ச… என்றாள் ஒருத்தி…
இல்லீடி… இவங்க
அப்படி இப்படி ஏதாவது… என்றாள் ஒருத்தி.
சீச்சீ… அதெல்லாம்
செய்திருக்கமாட்டாள்…
என்னடி அவரும்
நானும் ஒரே வகுப்பில் படித்தோம்… அவர் கொஞ்சம் நல்லா படிப்பாரு… அப்ப ஏற்பட்ட ஃப்ரண்ட்சீப்
தான்… வேற ஒண்ணுமில்லே… என்றாள் காமு…
காமு நீ அவரை
லவ் பண்ணலே என்று ஒத்துக்கவியா?...
போடி… நீங்க என்று
மேலே ஏதோ சொல்ல வந்தவள் அத்தோடு நிறுத்திக் கொண்டு வாங்கடி போகலாம் என்று கிளம்பி விட்டார்கள்.
எனக்குள் ஒரு
புன்சிரிப்பு. ஆமாம் ஒரு நாள் வகுப்பில், என்னை
கேர்ல்ஸ் ஒருத்தி அவன், டா என்று எல்லாம் போட்டு என்னுடன் பேசினார்களாம். அவர்கள் என்னிடத்தில் பேசும் போதும் கவனித்தேன். இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன். ஆனால் எனது நண்பர்கள் என்னிடம் அவர்கள் மன்னிப்புக்
கேட்கும் வரை விடவில்லையே. அதற்கப்புறம் தான்
என்னை மரியாதையா கூப்பிடுறா… என்று நினைத்து புன்முறுவலித்துக் கொண்டே ஹாஸ்டலை அடைந்தேன்.
மறுநாள் மாலை
காலேஜ் விட்டுட்டு ஹாஸ்டலுக்குச் சென்றுக் கொண்டிருந்தேன்.
அலோ… மணி ஸ்டே
தேர் என்ற குரல் கேட்டு நின்றேன்.
என்னை நீங்கள்
இப்படி வம்பில் மாட்டி விடுவீங்க என்று நினைக்கவே இல்லை என்றாள் காமு…
வம்பா… நான் என்ன
செய்தேன்… என்று தெரியாதவன் போல் கேட்டேன்.
நான் கேட்டதை இவர்கள் சீனியார் கிட்டே கேட்டு இருப்பார்கள். அவர்கள் இவர்களை மாட்டிக் கொண்டு இருப்பார்கள் என்று
நினைத்தேன்.
என்ன செய்தீங்களா…
நேற்று நீங்க கேட்டதை அவர்களிடம் கேட்டோம்
என்றாள் காமு…
அப்பப்பா… அப்புறம்
அவர்கள் எங்களை விட்டால் தானே. அங்கிருந்து
வருவதற்குள்ளே நாங்கள் பட்டபாடு என்று அலுத்துக் கொண்டாள் நீலு…
ஏன் நீங்களே அலுத்துக்கறீங்க…
எனக்கும் சொன்னால் நானும் கொஞ்சம் அலுத்துக்கறேனே… என்றேன்.
இந்தச் சின்ன
விஷயம் தெரியாம போய் மாட்டிக்கிட்டோமே என்று நாங்க கஷ்டப்படுறோம்… நீங்க என்ன? என்றாள்
நீலு…
எப்படி என்ன தெரிஞ்சுக்கிட்டீங்க…
என்றேன் மெல்ல…
சிக்ஸ்ஸை செக்ஸா
மாத்த தெரியாத ஒன்பதுகளா… என்றார்களே அவர்கள்… அப்போது,
சிரிப்பொலியும்
பேச்சும் கலந்து வந்து என் செவியைத் தாக்கியது. திரும்பிப் பார்த்தேன். இன்னொரு லேடீஸ்
கூட்டம் வந்துக் கொண்டு இருந்தது. அதில் ஒருத்தி…
என்ன காமு… இவர்
தான் உன்னோட லவரா?... என்றாளே…
போக்கா… நேத்து
மாட்டிக் கொண்டதே போதும்… இங்க வேறு என்று மழுப்பப் பார்த்தாள் காமு…
வந்தவர்கள் சொல்லிவிட்டு
போய்விட்டார்கள்.
காமு… டைம் ஈஸ்
கோல்ட்… சோ… செல் ஐ கோ மை ஆஸ்ட்டல் என்றேன்.
விஷ் யூ பெஸ்ட்
ரீட் என்றாள் காமு…
வித் யூ செல்ஃப்
என்றேன் நான்…
ஓகே … பை… பை..
என்று விடைபெற்றுச் சென்றார்கள்.
என்னைச் சுற்றிலும்
ஒரே கார் இருள். நான்குச் சுவர்களுக்கு மத்தியில்
படுத்துக் கொண்டு இருந்தேன். மெல்ல எழுந்து
உட்கார்ந்தேன். இதுவரை நான் கண்டது எல்லாம்
கனவா… அப்படி என்றால் நம் வாழ்வு எல்லாம் கனவாகத் தான் இருக்குமோ?...
அடடா… கல்லூரியில்
சேர்ந்தால் மூளை இப்படியா? வேலை செய்யும்.
கூடாது, நாம் செல்வது படிக்க, அதை வெற்றியோடு முடிக்க அப்படி இல்லாது முறிக்க
இல்லவே…
இப்ப அவள் காலேஜில்,
நான் கட்டிலறையில் … இது நீடிக்குமா?....
Comments
Post a Comment