துன்பத்தின் எல்லை

         கருத்த உருவம், உயரமான உடல், வெண்மையான பற்கள், அழகிய கண்கள், சுருண்ட தலைமுடி அமைதியே தன்னிடம் கொண்டு விளங்குபவளாய், பாசத்தின் பிறப்பிடமாகவும், உடலின்மேல் வேட்டி ஒன்றையும், துண்டு ஒன்றையும் போட்டுக் கொண்டு இருப்பவன் தான் கோவிந்தன்.

இவன் தொழிலோ மூட்டைத் தூக்கி சம்பாதிப்பது. வீட்டில் வயதான தாயும், பதினாறு வயதை மூழ்கி நிற்கும் ஒரு தங்கையும் உள்ளனர்.  இவர்களின் பாதுகாப்பு கோவிந்தன்.

அழகிய முகத்தையும், பார்ப்பவர்கள் கவரும் உடல் கட்டும்.  மீன் வழியாள், கூரிய அறிவையும், தெளிவான பேச்சும் கொண்ட கற்பின் நாயகியாக கோவிந்தனின் தங்கை காமேஸ்வரி என்ற காமு என்பவள்.  இவள் உயர்நிலைப் பள்ளி படித்துக் கொண்டு இருப்பவள்.  இவள் தான் வகுப்பில் முதல் மாணவி பத்தாம் வகுப்பில் 500க்கு 497 மதிப்பெண் வாங்கி மாநிலத்திலேயே இரண்டாவது இடத்தைப் பெற்றவள்.

ஏழ்மை தவழும் இடத்திலே தானே கலைமகள் குடி புகுகிறாள்.

தன் தங்கையை எப்பாடு பட்டாவது நல்ல படிப்பு படிக்க வைக்கணும் என்ற குறிக்கோளுடன் காமுவை படிக்க வைத்துக் கொண்டு இருந்தான்.

மனிதன் என்று ஒருவன் பிறந்தால் அவனுக்கென்று ஒரு கொள்கையை வகுத்துக் கொண்டு அதன் வழியில் வாழ்பவனே மனிதன்.  அதுபோல தான் கோவிந்தனும் நேர்மையான முறையில் உழைத்துத் தாயையும், தங்கையையும் காப்பாற்ற வேண்டும் என்ற கொள்கை உடையவன்.

ஒரு நாள் கோவிந்தன் பஸ் நிலையத்திலிருந்து ஒருவர் வீட்டிற்குப் பொருள்களைக் கொண்டு சென்றான்.  அவன் கொண்டு சென்றதற்கு ஐநூறு ரூபாய் கொடுத்தாலும் தகும்.  ஆனால் அவரோ நூறு ரூபாய் கொடுத்தார்.  அதைப் புன்சிரிப்போடு பெற்றுக் கொண்டு வீடு திரும்பினான்.  அன்று வருமானம் இரு நூறு ரூபாய் தான்.  இதிலே எப்படி குடும்பத்தைக் காப்பாற்றப் போகிறான்.  இதுமட்டுமா?

தெருவில் உள்ள குழந்தைகள் எல்லாம் அவனைக் கண்டால் போதும் அன்போடு ஓடி வந்து விடுவார்கள்.  அவர்களுடன் அன்பாகப் பேசி அவர்களுக்குச் சாக்லெட் வாங்கிக் கொடுத்த மீதியிலே அவன் குடும்பம் நடத்தி வந்தான்.

மற்றொரு நாள் ஒரு பணக்காரரின் கார் தங்கி விட்டது.  அதை ஒரு மைல் தள்ளிக் கொண்டு சென்றால் தான் ஒர்க்ஷாப் இருக்கிறது.  அதனால் காரைத் தள்ளுவதற்கு ஆளைத் தேடினார்.  அப்போது கோவிந்தன் உதவி செய்தான்.  இதற்கு அவர் கூலியாக ஐநூறு ரூபாய் கொடுத்தார்.  அதற்கு அவன் நூறு ரூபாய் போக மீதியை மாற்றிக் கொடுத்து விட்டு போனான்.

கூப்பிட்டு அதைக் கொடுத்தார்.  ஆனால் அவன் ஐயா… எனக்கும் கூலி வாங்க நியாயம் இருக்கிறது.  அதுக்கு மேலே வாங்கினால் அது பெரியவங்க செய்யற வேலைங்க… அந்த வேலையை இந்தச் சின்னாள் செய்யக் கூடாதுங்க என்று சொல்லிவிட்டுப் போய் விட்டான்.

யார் பெத்த பிள்ளையோ தெரியலே ரொம்ப நல்லப் பையன்.  நீ எங்க இருந்தாலும் நல்லா இருப்பா… என்று அவன் செயலைப் பாராட்டினார் பணக்காரர்.

ஒரு நாள் கோவிந்தன் ரோட்டில் சென்றுக் கொண்டு இருந்தான்.

திடீரென்று ஒரு கார் அதிவேகமாக வந்து அவன் மீது மோதியதால் ரோடு முழுதும் இரத்த வெள்ளத்தில் மூழ்கினான்.  அவன் துடித்து வந்து அவனைப் பார்த்தான்.   தம்பி நீயா… என்று அலாக்காகத் தூக்கிக் காரில் போட்டுக் கொண்டு மருத்துவமனையில் சேர்த்து விட்டு அவர்கள் வீட்டிற்கு எப்படியோ அடையாளம் கண்டு பிடித்து உள்ளே நுழைந்தான்.

இவர் வரவைக் கண்ட கோவிந்தனின் தாய் அப்படியே நின்றுவிட்டாள்.

அதேபோல வந்த பணக்காரனும் பேச முடியாமல் இருதலைக் கொல்லி எறும்பாகத் துடித்தான்.

கோவிந்தனின் தங்கை.  உட்காருங்க… யார் வேணும் என்றவள் அம்மாவைப் பார்த்தாள்.  இத்தனை நாளாக காணாத ஒரு முகத்தெளிவு கண்டாள்.  வந்தவர் முகத்திலோ சோகம் கூத்தாடியது.

என்னங்க  எப்படி இருக்கீங்க… நான் தேடாத இடமே இல்லை.  உன்னைக் காணாது நான் இந்த பதினைந்து வருஷமாக பட்டபாடு ஐயோ… லட்சுமி என்று கதறி அழுதார்.

லட்சுமியும் பிரிவின் துன்பத்தால் தாளமுடியாது அழுதாள்.

காமேஸ்வரி இவர்களின் பேச்சைக் கேட்டு மெய்ம்மறந்து நின்றாள்.  பிறகு அம்மா இவர் அப்பா… வா… என்றாள்.

ஆமாம் என்பது போல தலையாட்டினாள்.

எப்படி என்னைக் கண்டு பிடிச்சீங்க என்றாள் லட்சுமி.

நம் பிள்ளை கோவிந்தனுக்கு நானே எமனாகி விட்டேனே என்று கதறியழுதார்.

என்ன சொல்றீங்க… என்றாள் லட்சுமி.

என் காரில் மாட்டிக் கொண்டு… என்று இழுத்தார்.

ஐயோ… என் செல்வமே.  உன் உயிருக்கு ஆபத்து இல்லாம இருக்கணும்…

லட்சுமி உயிருக்கு ஆபத்து இல்லை.  ஒரு கால்… என்றார்..

அதுபோதும் என் அண்ணன், அன்பு அண்ணன். என் எதிரில் இருந்தாளே போதும் நான் உழைத்துப் போடுவேன் என்றாள் காமேஸ்வரி.  அழுகுரலில்.

வேண்டாம்மா… நான் இருக்கும் போது என்றார் அவர்….

 

Comments

Popular posts from this blog

யார் தவறு?

சென்றதோர் கற்றதோர்

முத்தின காய்