உறவும் உள்ளமும்
அன்று கல்லூரி திறப்பு விழா. அன்று முதல் கல்லூரியில் சேர்ந்த முதலாண்டு மாணவர்கள் எல்லாம் கல்லூரியில் ஆஜர் ஆனார்கள். அன்று வகுப்புகள் சரிவர நடக்கவில்லை. அன்றையில் இருந்து ஒரு வாரம் சீனியாரிட்டிகளிடம் மாட்டிக் கொண்டு நான் பட்டபாடு. ஒரு வழியாக ராக்கிங் எல்லாம் முடிந்து கிளாஸ் ஆரம்பம் ஆகியது.
அந்தக் கல்லூரி
தமிழ் நாட்டிலேயே புகழ் பெற்ற கல்லூரி என்பதால் மட்டுமல்லாமல் பழம்பெருமை வாய்ந்த கல்லூரி. அதுவும் போக கோஎஜிகேஷன் அமைந்திருப்பதால் அங்கு
அரட்டைக்குக் குறைவில்லை.
நான் கல்லூரியை
விட்டு பஸ் ஸ்டாபில் நின்றுக் கொண்டு இருந்தேன்.
அப்போது என் வகுப்பு மாணவிகள் அங்கு வந்து சேர்ந்தனர். நான் அவர்களைப் பார்த்துவிட்டு விழித்தேன். அதில் ஒருவள் என்னைப் பார்த்து புன்முறுவல் செய்தாள்.
நான் பயந்துபோய்விட்டேன். நிலைமையைச் சமாளித்துக் கொண்டு நானும் பதிலுக்குச்
சிரித்தேன். அந்த நேரத்தில் பஸ் ஒன்று வரவே
ஸ்டாபில் இருந்தவர்கள் எல்லோரும் வண்டியில் முண்டியடித்துக் கொண்டு ஏறினார்கள். நான் அடுத்த வண்டிக்காகக் காத்திருந்தேன். வண்டி நகர்ந்தது. எல்லோரும் போய்விட்டார்கள் என்று
நினைத்துத் திரும்பினேன்.
அஜந்தா சிலை ஒன்று
நிற்கிறதோ? என்று வியந்தேன். ஆனால், அது உயிருள்ளது
என்று உணர்ந்தேன். முன் சிரித்த அந்த சிரிப்பு
வள்ளிதான் இன்னும் நின்றுக் கொண்டு இருந்தாள்.
மீண்டும் நான்
சுற்றும் முற்றும் பார்த்தேன். யாரும் இல்லே.
நானும் அவளும் தவிர… நான் பயத்தில் நடுங்கினேன்.
தனித்து இருந்த
என்னிடம் அவள் வந்து… வந்தாள்…
நான் பயந்தே போய்விட்டேன்.
அவள் என்னைப்
பார்த்து சிரித்துக் கொண்டே உங்க பெயர் என்ன? என்றாள்?...
நடுக்கத்துடன்
கோபால் என்றேன்.
பிறகு ஊர்ப் பெயர்
கேட்டாள்.
பொதட்டூர்ப்பேட்டை
என்றேன்.
அது எங்கு இருக்கிறது
என்றாள்.
திருத்தணிக்கு
மேற்கே 20 கிலோமீட்டர். இதைச் சொல்லி முடிக்கவும்
நான் செல்ல வேண்டிய பஸ் வரவும் சரியாக இருந்ததால் வண்டியில் ஏறினேன். ஆண்கள் சீட்கள் எல்லாம் நிரம்பி இருந்தன. பெண்கள் சீட் ஒன்று காலியாக இருந்ததால் அதில் அமர்ந்துக்
கொண்டேன். அடுத்து என் பக்கத்தில் அவள் வந்து
அமர்ந்துக் கொண்டாள்.
குரங்கு கையில்
கிடைத்த பூவாக ஆனேன். இருதலைக் கொல்லி எறும்பாக
தவிக்க நான் எழுந்தேன். ஆனால், அவள் என் கையைப்
பிடித்து இழுத்து அமரச் செய்தாள்.
பேச்சோடு இருந்த
அவள் அவள் கை பட்டதும் என் எண்ணங்கள், உணர்வுகள் சில நொடிகள் அமைதியாகி வேகமாகத் துடிக்க ஆரம்பித்தன. அவளை நான் அப்படியே கொலை செய்து விடலாமா என்றும்
நினைத்தேன். இப்படியும் ஒரு பெண்ணா?... நான்
இரங்கும் இடம் வந்தது.
ப்ளீஸ் ஜஸ்ட்
கேப் என்றேன்.
ஓ.. கே.. என்றவள்
என் கையில் ஒரு கடிதத்தைக் கொடுத்தாள்.
கடிதத்தை வாங்கிக் கொண்டு நேரே ஹாஸ்டல் ரூமுக்குச் சென்று
உடை மாற்றிக் கொண்டு முகம் அலம்பிய பிறகு அவள் கொடுத்த கடிதம் நினைவுக்கு வந்தது. கடிதத்தைப் படித்தேன். அதில்…
நண்பரே… வணக்கம். நீங்கள் சென்னைக்குப் புதிய ஆள் என்பதை புரிந்துக்
கொண்டேன். அதனால் உன்னிடம் அதிகமாக விளையாடிவிட்டேன். மன்னிக்கவும்.
இப்படிக்கு
செல்வி
எனக்கு அழுகையே
வந்து விடும் போல் இருந்தது. இதுவா விளையாட்டு
பட்டணம் இதுதானா என்று அப்போது உணர்ந்துக் கொண்டேன்.
நாட்கள் பல நகர்ந்தன. முதல் செமஸ்டர் முடிந்தது. அந்த லீவில் நான் ஊருக்குத்
திரும்பினேன். இதற்கிடையில் நானும் அவளும்
பல சந்தித்ததில் காதல் வளர ஆரம்பித்தன.
காதல் என்றால்
அது அன்பான, பாச உணர்வில் பங்கு கொள்ளும், அன்புக் காதல். என் மனதில் உருவெடுக்கத் தொடங்கியது.
வீட்டில் விஷேசம்
ஒன்று நடந்தது. அதற்குச் சுற்றத்தார் எல்லோரும்
வந்திருந்தனர். இதற்கெல்லாம் அசையாத நான் ஓர்
உருவம் பார்த்து அசந்தே போய்விட்டேன்.
ஆமாம் நான் அன்பாக
நேசிக்கும் அவள், அந்த அன்னநடையாள், சின்ன இடையாள், அழகின் செல்வியாள் அங்கு நின்றுக்
கொண்டு இருந்தாள்.
நான் அவளைப் பார்த்ததும்
எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. ஆனால் எனக்குச்
சந்தேகம் இவள் செல்வி தானா?...
கோபால்… கோபால்…
என்று தந்தையின் குரல் கேட்க நான் ஓடினேன்…
கோபால்… இங்கு
எப்படி இவன். இதுதான் கோபால் வீடா… இது மாமாவின்
வீடு என்றுதானே அப்பா சொன்னார். அப்படி என்றால்
இவன் மாமன் மகனா?... இருக்காது. இவன் கூலியாளாகத்
தான் இருக்க வேண்டும். இந்த நினைவில் இருந்த
செல்வியை…
செல்வி… செல்வி…
வாம்மா சாப்பிடலாம் என்று தந்தை கூற உடன் சென்றாள்.
வந்த உறவினர்கள்
எல்லாம் வரண்டாவில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர். நான் அப்போது பந்தியை ஒரு சுற்று சுற்றிக் கொண்டு
வந்தேன். அங்குச் செல்வி என்னைப் பார்த்து
புன்முறுவல் செய்தாள்.
நானும் பதிலுக்குச்
செய்துவிட்டு நகர்ந்தேன்.
பந்தி முடிந்து
எல்லோரும் போய்விட்டார்கள். கூடத்தில் என்
அப்பாவும், செல்வியின் அப்பாவும் செல்வியும் உட்கார்ந்து பேசிக் கொண்டு இருந்தார்கள்.
இவள் ஏன் இன்னும்
இங்கேயே இருக்கிறாள். இவள் நமக்கு என்ன உறவு. மெல்ல இறங்கி நானும் அவர்களிடம் சென்றேன்…
அப்பா… என்றேன்.
அப்பாவா… என்றாள்
செல்வி.
ஆமாம்மா… இவன்
என் மகன் கோபால் என்றார்.
ஏண்டா இவன் உங்க
பையனா?...
ஆமாண்டா…
இப்படியா உங்க
பையன் இருக்கான். நான் இவனை வேலைக்காரன் என்று
அல்லவா நினைத்தேன்.
ஆமாண்டா எல்லோரும்
அப்படித்தான் சொல்லுவாங்க…
டேய் அவன் ஒரு
மேதை டா. அவன் ஒரு தத்துவ ஞானிடா. ஆமாம், ஆடம்பரம்
ஒரு வீண் செலவு என்று சொல்லுபவன். இலட்சியமாகவும்
கொண்டவன். என்று தந்தைமார்களின் பேச்சு நீடித்தது.
கோபால்… இது உங்க
மாமன்டா… இது…
அவருடைய மகள்…
நம்… எனப் பாதியில் நிறுத்தினேன்…
என்னுடைய மருமகள்…
உனக்குச் சம்மதமாடா… கோபால்…
அப்பா… நானும்
இவளும் ஒரே வகுப்பில்… என்றாள் செல்வி…
தெரியும்மா… என்றார்
அவர் மாமா.
என்னப்பா… சொல்றீங்க…
நீயும், அவளும்
ஒன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான்…
டேய்… அவங்க உள்ளமும்
உறவும் எப்படி அமைந்தது பார்த்தாயா?...
அதுதான் நல்ல
குடும்பத்திற்கு அர்த்தம்.
Comments
Post a Comment