இப்ப என்ன உறவு

மனிதர்கள் எல்லோரும் நல்லவராகவே இருப்பதில்லை.  அப்படி இருந்தாலும் அவனுடைய சிநேகிதர்கள் அவனைத் தீய செயல்களுக்கு இழுக்கின்றனர்.  அந்த விதமாகத்தான் சுப்பையா என்பவரும் இருந்தார்.

காலையில் எழுத்து மாலை வரை வயலில் வேலை செய்துவிட்டு தன் ஒரே மகள் ராஜாத்தி பொங்கி வைத்ததைச் சாப்பிட்டுவிட்டு இரவு சீட்டு, குடி என்றெல்லாம் ஆடிவிட்டு இரவு பதினொறு மணிக்கு வீடு வருவார்.

பொறுப்புள்ள ஓர் தந்தை இப்படியெல்லாம் வீண் செலவு செய்வானேன்.  சம்பாதிப்பதும் அதைக் குடிப்பதும், சீட்டு ஆடுவதுமாக இருந்த அவர் எப்படி தன் மகளுக்குத் திருமணம் செய்து வைக்கப் போகிறார்.  இப்படித்தான் ஒரு நாள்…

டேய் பொன்னுசாமி.  இன்னிக்கி வாங்க ஒரு கை பார்த்திடறேன்.  இத்தனை நாளா என்கிட்ட பணம் அதிகம் இல்லே.  இன்னிக்கி எங்க எஜமான் நல்ல துணியாய் எடுத்துக்க என்று நூறு ரூபாய் கொடுத்தாரு… வாங்கடா…

டேய்… இன்னிக்கி நமக்கு நல்ல வருமானம் தான்…

யாருக்குப் பார்த்திடலாம்… டேய்… நாலு பாட்டில் சாராயம் கொடுடா…

சுப்பா… நாலு போதுமா… இன்னும் ரெண்டு சேர்த்து எடுத்துவா…  ஏன்னா அவங்கிட்டே நூறு ரூபாய் இருக்குது…

ஒவ்வொரு  வினாடி நகரும் போதும் சுப்பையாவின் கையில் இருந்த பணம் சிறிது சிறிதாக குறைந்துக் கொண்டே வந்தது.  ஆனால் கையில் இருந்த பாட்டலோ வயிற்றை நிரப்பியது.  அளவுக்கு அதிகமாக் குடித்ததால் சுப்பன் சீட்டில் கவனம் செலுத்த முடியலே.. கொண்டு வந்த பணத்தை எல்லாம் தொலைச்சாச்சு…

ஆ… இவன் நம்மகிட்டே வாலாட்டினான்… இப்ப வாலை ஒட்ட நறிக்கிட்டோம் என்று பொன்னுசாமியும் அவன் ஆட்களும் சிரித்துக் கொண்டே அவனை விட்டுப் பிரிந்தனர்.

மணி இரவு பன்னிரண்டு ஆகியம் தன்னுடைய தந்தை வரவில்லையே என்ற கவலையோடு சீட்டு ஆடும் சத்திரத்திற்கு ஓடி வந்தாள்.  அங்கு…

அவள் தந்தை அடித்துப் போட்ட புலி போல படுத்துக்கிடந்தார்.  அவரைச் சுற்றி ஆறு சாராய பாட்டில்கள் அணைத்துக் கொண்டு  இருந்தன.  மெல்ல அவள் தந்தையைத் தூக்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தாள்.

ராஜாத்தி… மிளகாய் ரெண்டு குடு… என்று தள்ளாடிக் கொண்டே கேட்…..டார் சுப்பைய்யா….

அது ஒண்ணுதான் கொற… என்னடா வீட்டிலே ஒரு பொண்ணு இருக்குதே என்று எப்பவாவது கவலைப்பட்டிருக்கியா?

மொளகாய் கொடுக்கரயா? இல்லியா?

இந்தா…புடி… என்று  கொடுத்துவிட்டு படுக்கச் சென்றாள்.  இரவு மணி  பன்னிரண்டுக்கு மேலே ஆகி  இருந்ததால் அயர்ந்த தூக்கக் கலக்கத்தில் தூங்கி விட்டாள் ராஜாத்தி.

குடித்தவனுக்கு முதலில் வாய்க்குச் சுவை கேட்கும்.  வாயில் சுவை அடங்கினால் மங்கையின் சுவையை நாடும்.  இது குடிகார மனிதனின் இயல்பு.  அந்த நிலையில் தானே இப்பொழுது சுப்பையாவும் இருக்கிறார்.  இன்றைக்கு அளவுக்கு அதிகமாக குடித்து இருப்பதால் அவர் தன்னை மறந்தார்.  தான் இருக்கும் இடத்தை மறந்தார்.  ஏன் எதிரே துயில் கொண்டு இருக்கும் தன் மகள் என்பதை மறந்தார்.

முதலில் குடித்தார், வாய்க்குச் சுவையாகக் காரத்தை உண்டார். அதற்கு அடுத்து,

விளக்கு வெளிச்சத்தில் அவருடைய மகள் ராஜாத்தி ஓர் அழகு ஓவியமாக, கலைமகளாகக் காட்சியளிக்கும் அவள் உருவம்.  பாவம் சுப்பையாவின் வெறி பிடித்த கண்களுக்கு வெறும் பெண்ணாய், அதுவும் தந்தைக்கு ஆசையை ஊட்டிய பெண்ணாய் இருக்கப் போகிறாளே அதற்கு என்ன செய்வது…

சுப்பையா தன்னையே மறந்த பிறகு தன் குடும்பத்தைப் பற்றி, வெளி உலகைப் பற்றிக் கவலை ஏது?  இப்போது தனக்குத் தேவை ஒரு மங்கை.  அவள் யாராக இருந்தால் அவருக்கு என்ன?

நேரம் செல்லச் செல்ல வெறிபிடித்த சுப்பையா தன் மகளை, தன் ஆசைக்கு இறையாக்கிக் கொண்டார்.  பன்றி தான் ஈன்ற குட்டிகளை எப்படியும் ஒன்று இரண்டு கடித்து தின்றுவிடும்.  அது உயிரைக் கொன்றது.  ஆனால் சுப்பையா தன் மகளின் எதிர்காலத்தையே அல்லவா… சூறையாடிவிட்டார்.

மனிதராய் இருந்த சுப்பையா குடி வெறிக்கு ஆளாகி சில நிமிடங்கள் மிருகமாய் நடந்துக்  கொண்டாரே… இதன் விளைவு…

விடியற் காலையில் ஊரே பரபரப்பு அடைந்து இருந்தது.  ஆனால் சுப்பையா மட்டும் இன்னும் குடி மயக்கத்தில் இருந்து தெளிந்தபாடில்லை.

ஊர் ஜனங்கள் அவர் வீட்டுக் கதவைத் திறந்துக் கொண்டு அவரை எழுப்பினார்கள்.   மயக்கத்தில் இருந்த சுப்பையா எதிரே நிற்பவர்களையும் அவர்கள் மேல் துவண்டு கிடக்கும் தன் மகளையும் பார்த்ததும் கொஞ்சம் நஞ்சம் இருந்த மயக்கம் எல்லாம் தெளிந்துவிட்டது.

ஐயோ… மகளே  ராஜாத்தி உனக்கு என்னம்மா… ஆச்சு… என்று அலறியடித்துக் கொண்டு எழுந்தார்.

அழகு மயிலாக, கலைவாணியாக காட்சியளித்த ராஜாத்தி இப்போது கலைந்த அவள் மேனியில் நான் கொடும்பாவி என்று காட்சியல்லவா தந்துக் கொண்டு இருக்கின்றன.

ஐயா… என் மகளுக்கு என்னய்யா… என்ன நடந்தது? என்று கேட்டார் சுப்பையா.

என்ன நடந்ததா… நீ எங்கு இந்த உலகத்தில் இருந்தே.  உன் மக ராஜாத்தி கிணத்திலே குதிச்சி தற்கொலை செய்துக்கிட்டாயா?

ஐயோ… மகளே ராஜாத்தி நான் என்ன பாவம் செய்தேன்.  ஏன் என்னை விட்டுப் பிரிந்தாய்…

குடி வெறியில் தான் என்ன செய்தோம் என்பது அவருக்கு எங்குத் தெரியப் போகுது…

இதற்குள் எப்படியோ போலீசாருக்கு விஷயம் தெரிந்து உடலை எடுத்துக் கொண்டு வீட்டைச் சோதனை போட்டார்கள்.  அப்போது, கிடைத்தது ஒரு வெள்ளைக் கடிதம்.   அதில்,

அன்பு அப்பாவுக்கு உங்கள் மகள் ராஜாத்தி எழுதிக் கொள்வது.

அதிகக் குடி வெறியில் இரவு மகளா? மனையாளா? என்றும் பாராமல் என்னோட கற்பை அழித்தீங்க… உங்கள் குடிவெறி என் வரைக்கும் வந்துவிட்டது.  இனி நான் உங்கள் மகளா?  எனக்கு ஒரு இடத்தில் மணம் செய்து வைக்க வேண்டிய நீங்களே… என் மானத்தை வாங்கி விட்டீர்களே… இதற்கு நீங்கள் என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்… இவ்வளவு நடந்தும் நான் இனி உயிரோடு இருப்பது இந்திய மண்ணில் பிறந்ததற்கு அர்த்தம் இல்லை.  அதனால் நான் தற்கொலை செய்துக் கொள்ளப் போகிறேன்.  அப்பா இதற்குப் பிறகாவது நீங்கள் திருந்தினால் என் மனம் சாந்தி அடையும்.

இப்படிக்கு

ராஜாத்தி

ராஜாத்தி… நானா இப்படி நடந்துக் கொண்டேன்.  ஐயோ நான் என்ன தவறு செய்துவிட்டேன்.  குடி குடியைக் கெடுக்கும் என்பார்களே… என்று எல்லாம் புலம்பி புலம்பி அழுதார் சுப்பையா.

தீய வழியில் சென்றால் அவனைத் திருத்த ஒருவனும் முன்னுக்கு வரமாட்டான்.  அப்படி வருபவனும் அவனைத் தீய செயலுக்கு ஈடுபடுத்துவான்.  அவன் ஏதாவது தவறுகள் செய்துவிட்டால் அவனைத் தூற்றுபவர்கள் எத்தனை பேர்.  அதுவும் சுப்பையா செய்த காரியத்திற்குக் கேட்கவா வேண்டும்.

குடிவெறி தன் கண்ணையே மறைத்து விட்டது என்றார் ஒருவர்.

பாவம், ராஜாத்தி அவளுக்கா இந்த நிலை என்றாள் ஒருத்தி.

மானமுள்ளவள் அதுதான் தான் இன்னும் உயிர்வாழக் கூடாது என்று செத்தாள் இது ஒருத்தி. 

இப்ப என்ன உறவானாளோ? இது ஒருத்தி.

தன் மகளையே மனைவியாக நடத்திய இவனை… என்றார் ஒருவர்…

இப்படி ஆளுக்கு ஒன்று ஒன்றாகச் சொல்லிவிட்டு நகர்ந்தனர்.

போலீசார் சுப்பையாவைக் கைது செய்து, ராஜாத்தியின் உடலை எடுத்துப் போய்விட்டனர்.

தனியாக விடப்பட்ட சுப்பையா சிந்திக்கத் தொடங்கினார்.  அம்மா ராஜாத்தி நீ என் மகள் இல்லை என்னைத் திருத்திய தெய்வம்.

குடிப்பவர்கள் எல்லாம் இப்படித் தான் நடந்துக் கொள்வார்கள் என்று புரிந்துக் கொண்டேன்.  இதுபோல பலர் தற்கொலை செய்துக் கொள்வதை தவிர்க்கப் போகிறேன்.  உலகம் என்னை என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும் அதைப் பற்றிக் கவலை இல்லை.  ஆனால் உன்னைப் போன்ற மகள்களும், மனைவிகளும், குழந்தைகளும் குடிகாரனிடம் மாட்டிக் கொண்டு அவதிப்படுவதைத் தடுக்கப் போகிறேன்.  இதுதான் என் உறுதி.  உன்னைப் போல எனக்குத் தற்கொலை செய்ய மனமில்லையே… அம்மா ராஜாத்தி உன்னை நான் மீண்டும் பார்க்க முடியுமா?  என்று கூறி தன் தவறை உணர்ந்து ஊரை விட்டு வெளியேறி நாட்டில் பிரசங்கம் செய்து, இப்போது சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்.

இத்தனைக்கும் காரணம் குடிகாரனாக இருந்தவன் இப்படி ஏணிப்படியாக உயர்ந்து இருக்கிறான் என்றால் அதற்கு மூலக் காரணம் யார்?

போட்டி என்று ஆரம்பித்தால் ஒருவனுக்கு வெற்றியும், மற்றவனுக்குத் தோல்வியும் ஏற்படும்.  அதுபோலத்தான் சுப்பையாவின் வாழ்வில் தோல்வி ஏற்பட்டாலும், அந்தத் தோல்வியின் காரணமாக இப்போது ஒரு சமூகச் சீர்த்திருத்த வாதியாக சட்டமன்ற உறுப்பினராக மக்கள் முன்னிலையில் திகழ்கிறார்.

இத்தனைக்கும் காரணம் பேதை அவள்…

Comments

Popular posts from this blog

துன்பத்தின் எல்லை

உறவும் உள்ளமும்

காலம் இப்படி