சென்றதோர் கற்றதோர்
அன்பு என்பது எல்லோராலும் பெற்றிட முடியாது. பணத்தால் முடியாதது இல்லை என்பார்கள். உண்மைதான் கடையில் கிடைக்கும் பொருள்களையும், தெருவில் அலையும் பொருள்களையும் பெற்றிடலாம். ஆனால், அன்பு என்ற புனிதச் சொல்லைப் பெற்றிட முடியுமா?
அன்பு என்பது நம்மிடம் மட்டும் தான் காண முடியும் என்று சொல்லிவிட
முடியாது. ஏனென்றால் நம்மைக் காட்டிலும் மிருகங்களிடத்தே
அன்பு நிறைந்து காணப்படுகிறது. உதாரணமாக குரங்கை
எடுத்துக் கொள்வோமே…
நான் ஒரு நாள்
எங்கள் பள்ளிக் கூடத்திற்குத் தனிமையில் படிக்கலாம் என்று சென்றேன். படித்தேன்.
ஆனால், படிக்க விட்டதா வானரங்கள். எங்கள்
பள்ளியில் மெய்ன் ஹால் என்ற ஒரு பகுதி உள்ளது.
அங்குதான் நான் படிக்கச் சென்ற இடம்.
அந்த இடம் பயங்கரமானது. அதனருகில் ஒரு
ஓசையை எழுப்பினாலோ அல்லது பலத்த மழை பெய்தாலோ போதும் கல்விக் கூடமானது கழிவுக் கூடமாக
இருக்கும். இன்றோ நாளையோ கீழே விழுந்திடும்
நிலையில் காணப்படும். அருமையான கட்டிடம். அந்தக் கட்டிடத்தில் நான் படிக்கச் சென்றேன். அந்தக் கூடம் இப்பொழுது மாணவர்கள் படிக்கும் கூடமாக
இல்லாமல் வானரங்கள் படிக்கும் கூடமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. இதனால் அந்த இடம் எங்கள் பள்ளிக்கு ஒரு பயனும் அற்று
உள்ளதே என்பதால் நான் அங்குச் சென்றேன். நான்
படிக்கச் சென்றதோ தமிழ்ப் பாட நூல். நான்.
முகைமுறுக் கவிழ்ந்து
முருகுகொப் பளிக்கும் என்ற பாடலைப் படித்துக் கொண்டு இருந்தேன். அப்போது, முகமது நபி அழகு நிறைந்து விளங்கும் குளத்தில்
வாளை மீன்கள் துள்ளிப் பாயும் போது அதற்காக அஞ்சிய அழகிய சிறகுகளையுடைய பறவைகள் ஆரவாரம்
செய்யும் வகையில் விளங்கும் இடங்களைக் கடந்ததுபோல் வானரங்கள் எங்கள் பள்ளியில் கூரையின்
வழியாக காலையில் சூரியன் சந்து பொந்துகளில் ஒளிர்விடுவதைப் போல ஹால்ல முழுவதும் வானரக்
கூட்டங்கள்.
நான் அவற்றைப்
பார்த்ததும் எழுந்து போய்விடலாமா என்றொரு எண்ணம் மற்றொரு பக்கம் நம்மை என்ன தான் செய்கிறது
என்று பார்ப்போமே என்று அரைமனதுடன் அமர்ந்து படிக்காமல் அவைகளின் சேட்டைகளை உன்னிப்புடன்
கவனிக்க ஒரு போதும் தவறியதில்லை. அவைகளை எல்லாம்
எடுத்துக் கூறினால் அன்பு என்பது யாரிடம் உள்ளது என்பது விளங்கும்.
இரண்டு குரங்குகளில்
ஒன்று கீழே படுத்துக் கொண்டும், மற்றொன்று அதற்குப் பேன் பார்ப்பதுமாக இருந்தது. அதே சமயத்தில் இன்னும் பல குரங்குகள் சண்டை போடுவதும், ஓடுவதும், பிடிப்பதும்
அவைகள் கடிப்பதுமாக இருந்தன.
நாம் சேட்டைகள்
ஏதாவது செய்தால் பெரியவர்கள், குரங்கு சேட்டைகள் எல்லாம் பண்ணாதே என்கிறார்கள். ஆமாம் வேண்டாததை வேண்டாம் என்கிறார்கள். அவைகளிடம் இருந்து நாம் எவ்வளவோ பாடம் கற்பித்துக்கொள்ள
வேண்டும்.
ஒருவன் ஏட்டுக்
கல்வியுடன் இருப்பான். ஆயின் அவனுக்கு வெளியுலகம்
முழுவதும் அவன் கற்ற ஏட்டுக் கல்வியின் மூலமே இருக்கும். ஆனால் ஒருவன் வெளி உலகைப் பற்றியும் அதன் செயல்
முறைகளைப் பற்றியும் சிந்திப்பானாயின் அவனின் எண்ணமெல்லாம் கடலில் செல்லும் கப்பலைப் போன்றதாகும்.
நாம் நம் சுற்றுப்புறத்தில்
ஒருவர் காலமாகிவிட்டால் அவரைப் பற்றியும், அவர் குடும்பத்தைப் பற்றியும் சிந்திப்பார்
யார் உளர். யாரோ சிலர் நெருங்கிய நட்புக்காவும்,
மற்றவர்கள் துன்பப்படுவதைத் தாங்காமல் துன்பம் கொண்டவர்கள் போல சினிமா நடிகர் போலல்லவோ
சென்று துயரம் கொள்கிறார்கள். ஆனால் நான் படித்துக்
கொண்டு இருந்த அன்று.
இரண்டு குரங்குகள்
சண்டை போட்டுக் கொண்டு இருந்தன. இவற்றை நான்
வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தேன்.
ஒரு சமயம் இந்தக் குரங்குகள் கீழே விழுந்தால் என்ன ஆவது என்று ஒருபுறம் நினைத்துக்
கொண்டே இருந்தேன். திடீரென்று ஒரு குரங்கு கீழே விழுந்தது. இதைக் கண்ட மற்ற குரங்குகள் எல்லாம் அவற்றை விழிவிழி
என்று பார்த்துக் கொண்டும், ஒரே கூச்சலுடனும், அதைச் சூழ்ந்துக் கொண்டும் வட்டமிட்டன. இதைக் கண்ட ஒரு பறவை மேலே வட்டம் இட்டது. இப்பறவையைக் கண்டு இன்னும் பல பறவைகள் ஒன்று சேர்ந்தன.
நான் நினைத்தது
சரியாய்விட்டதே என்று அரைமனதுடன் அவைகளைத் துரத்த முயன்றேன். ஆனால் இவ்வளவு நேரம் என்னைப் பற்றிக் கவலைப்படாமல்
இருந்த வானரங்கள் இப்பொழுது என்னைத் துறத்த ஆரம்பித்தன.
எனக்கோ… ஒரே பயம். அதன் இறப்பின் துன்பத்தால் என்னை எங்குக் கடித்துவிடப்
போகுதோ என்று நினைத்து வந்துவிட்டேன்.
இந்தக் குரங்குகளிடம்
இவ்வளவு அன்பு இருக்கிறதே… அது நம் ஆறு அறிவு பெற்ற நம்மிடம் இருப்பதாகத் தெரியவில்லை.
பாடம் படிக்கப்
போன எனக்கு வானரங்கள் நல்ல ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுத்துவிட்டது.
Comments
Post a Comment