துண்டுக் கடிதம்
இரவு நேரம். எங்கும் இருள் சூழ்ந்து ஜில் என்ற காற்று உடலில் தெளித்து உடம்பைச் சிலிர்க்க வைக்கும் பனித்துளிகள். இதற்கு மத்தியில் ஒரு பங்களா அதில் இருளைப் போக்கி மின்சார விளக்கின் மகிமையை எடுத்துக் காட்டிக் கொண்டு நின்றது. அந்த பங்களாவில்,
விளக்கொளியின்
மையத்தில் மெத்தையின் மேலே இருபது வயது மதிக்கத்தக்க ஆடவன் ஒருவன் படித்துக் கொண்டு இருந்தான். அந்தச் சமயம்,
சின்ன இடையாள்,
கருங்கூந்தல் அருவியால், நாவல்கனி கண்ணாள், மீன் இமையாள், கோவைப்பழ முகத்தாள், ஆப்பிள்
பழ மூக்காள், ஆற்றோடை போன்ற நெற்றியாள் ஒருவள் மெல்ல அவனை நோக்கிச் சென்றாள்.
என்னங்க… அப்படி
மும்முரமாக மூழ்கிட்டீங்க… சாப்பிட வர்லீயா… அத்தை கூப்பிடுறாங்க… என்றாள் அவள்.
சிறிது நேரம்
மௌனம்.
மீண்டும் அவளே…
என்னங்க நான் கூப்பிடுறேன்… அப்படி என்ன அந்தப் புத்தகத்தில் இருக்கு… என்று அவனை ஒரு
உலுப்பு உலுக்கினாள்.
என்ன நீ என்னை
படிக்கவிட மாட்டாய் போல இருக்கிறாய்.
மணி பத்து ஆகுதுங்க…
அத்தை உங்களைச் சாப்பிட அழைத்து வரச் சொன்னாங்க…
அம்மா… தாயே…
எனக்குச் சாப்பாடும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் கொஞ்சம் போறீயா… என்றான் கோபமாக.
என்னங்க… இவ்வளவு
நேரம் சாப்பிடாம இருந்தால் உடம்புக்கு ஆகுமா?...
பரவா இல்லை. உன்னைக் கட்டிக்கறதுக்கு முன்னேயே இவ்வளவு கவனிப்பா…
இப்ப நீ போகப் போறீயா… இல்லீயா… என்றான் அவன்.
நீங்க வராம நான்
போகமாட்டேன்.
மஞ்சு நான் இந்தப்
பக்கத்தைப் படித்திட்டு வந்திடறேன் போயேன்.
அப்படி என்னங்க
இருக்கு இந்தப் பக்கத்தில்…
அற்புதமே இருக்கு…
அற்புதமா… என்னங்க
அந்த செய்தி… எனக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன்…
சொல்லுறேன். இது என்னது என்று தான் கையில் வைத்துக் கொண்டு இருந்த
விகடனைக் காண்பித்தான்.
விகடன்…
விகடன் தான்…
இதற்கு வயது என்ன தெரியுமா?...
இதற்கும் வயது
இருக்கா என்ன?
ஆமாம். இதை ஆரம்பித்து எழுபத்தைந்து வருடம் ஆகியது. ஆகவே இதற்கு வயது…
வயது எழுபத்தைந்து…
நீங்க வாங்க சாப்பிடுவீங்க…
மஞ்சு என்னைத்
தொந்தரவு படுத்தாதே… கலைஞரின் கவிதையைப் படித்திட்டு இருக்கேன். முக்கியமான கட்டத்தில் வந்து தொந்தரவு பண்ணுகிறாயே…
விகடனாம் விகடன். உங்களை எப்படி மாற்றிவிட்டது. அப்படி அதன் மகிமை என்னதாங்க…
அடி பைத்தியமே…
என்ன சொன்னீங்க…
இரு அத்தையைக் கூப்பிடுறேன்…
அம்மா… தாயே இதற்கே
இந்தக் கூப்பாடுன்னா… எனக்கு எப்படி இருக்கும்.
அது என்னங்க கவிதை
போல இருக்கு…
அ… அது… நான்
எழுதியது.
என்ன நீங்கள்
எழுதியதா…. இப்படிக் கொடுங்க…
மாட்டேன்…
கொங்க என்று பிடிங்கிக்
கொண்டு ஓடினாள்… அவளைத் துரத்திக் கொண்டு அவனும் ஓடினான்…
அத்தை இவரு என்னை…
அம்மா… இவள் என்னோட…
பாரு அத்தை சாப்பிட
வாங்க என்றாள்… விகடன் படித்துக் கொண்டு இருக்கிறார்…
அம்மா… அந்த…
அத்தை இவரு கவிதை
எழுதி இருக்காராம் இதைப் பாருங்களேன்…
அம்மா… அதை இப்படிக்
கொடுங்க…
அத்தை இவர் கிட்டே
கொடுத்தால் எனக்குக் கோபம் வரும்…
வரட்டுமே… நான்
உன்னை என்று அவளைக் கிள்ள அவள் காதைப் பிடித்தான்…
அத்தை பாருங்க
என் காது…
அது காது… (தெலுங்கில்
காது என்றால் இல்லை என்று பொருள்)
டேய்… செல்வம்
அவளை விடுடா…
அத்தை….
டேய்… செல்வம்…
அம்மா அந்தக்
காகிதத்தைக் கொடுக்கச் சொல்லுங்க…
நான் மாட்டேன்…
மாட்டே…
ஐயோ… அத்தை…
மஞ்சு இப்படிக்
கொடு அதை…
நீங்க அதை அவருகிட்டே
கொடுக்கக் கூடாது…
கொடுக்கலே கொடு…
கொடுக்கக் கூடாது…
என்று சொல்லிக் கொண்டே அதைக் கொடுத்தாள்.
அப்பப்பா… எப்படித்தான்
இவள் கூட குப்பை கொட்டப் போகிறேனோ…
அத்தை இவர் முணுமுணுக்கராறு
பாருங்க…
என்னம்மா… கல்யாணமே
பண்ணிக்கலே அதுக்குள்ளே இவள் என்னை ஆட்டி ஆட்டி தனித்தனியாக பிரித்தெடுப்பாள் போல இருக்கே…
என்னடா… இது…
அப்பப்பா… நான் உங்களை சமாளிக்க…
அதெல்லாம்… இருக்கட்டும்
அந்தக் காகிதத்தில் என்ன இருக்குது அத்தை…
இந்தா நீயே படித்துப்பார்…
கொடு அத்தை… என்று
அதை வாங்கிக் கொண்டு ஜாக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டாள்…
அம்மா… இவள்…
நான் அப்புறம்
தான் படிப்பேன். நீங்க சாப்பிடுவிங்களா? இல்லியா? இப்ப…
நான்… உன்னை…
என்றான் கோபத்துடன்…
டேய் செல்வம்
நீ சாப்பிடலே என்று இன்னும் அவள் சாப்பிடவே இல்லைடா…
அப்படியா… எனக்குச்
சாப்பாடு போடும்மா… அம்மா தாயே உட்கார்ந்து சாப்பிடு…
பாரு அத்தை என்னைத்
தாயே என்று சொல்லராறு…
என்னம்மா… தாய்க்குப்
பின் தாரம். தாரம், தாய். தாயும் தாரமும் ஒன்றுதானே
இப்ப நான்
இப்ப இல்லே ஆகப்
போரவதானே.,..
சாப்பாடு முடித்துவிட்டு
மஞ்சு அந்தக் கடிதத்தை எடுத்துப் படித்தாள். அதில்,
விகடன் வயது எழுபத்தைந்து – நாட்டின்
விடியலின் வயதும்
எழுபத்தைந்து – இதன்
ஆனந்தம் பெருகியதும்
பெருக்கியதும் வாகசரிடம்
ஆனந்தத்தைப் பெருக்கியது
இவ்விழா
அந்த…
என்னங்க… கவிதை
பாதியில் நிறுத்திட்டீங்க…
எங்க என்னை எழுத
விட்ட…
இந்தாங்க கவிதை
ஏ…ஏன்… இன்னும் எழுதுங்க…
எழுதறேன்…
ஆனால்…நீ குறுக்கே வரமாட்டாயே…
நீங்க கடமையை சரியாக செய்தா வரமாட்டேன்…
உன்னை…
காகிதம்… கவிதை… கிழிஞ்சு…
கொடு அதை என்று பிடிங்கிக் கொண்டு போனான்.
Comments
Post a Comment