யார் தவறு?
அன்று மாலை நான் பணிபுரியும் ஆபீசை விட்டுவிட்டு வெளிவந்த போது மணி ஐந்து இருக்கும். நேராக நான் குடியிருக்கும் இல்லத்தை நோக்கி நடக்கலானேன். இன்று எப்படிப் பொழுதைப் போக்குவது? சினிமாவிற்குப் போகலாமா? என்று எண்ணிக் கொண்டு பாக்கெட்டில் கையை விட்டேன், பதினைந்து ரூபாய் இருந்தது. சரி என்று எண்ணிக் கொண்டு வீடு வந்தேன். கிணற்றடியில் போய் முகம் அலம்பப் புறப்பட்டேன். அங்கே நான் குடி இருக்கும் வீட்டுக்காரரின் பெண் தண்ணீர் எடுத்துக் கொண்டு இருந்தாள். நான் ஒதுங்கினேன்… ஆனால் அவள்… என்னங்க…. அங்கே நின்னீட்டிங்க… நீங்க முகம் அலம்பிக் கொள்ளுங்கள்… என்றாள். இதுவரை என்னைப் பார்த்தால் முகத்தைத் திருப்பிக் கொள்ளும் அவளா பேசுவது. என்று சந்தேகப்பட்டேன். முகத்தைக் கழுவிக் கொண்டு தலையைச் சீவ ஜன்னல் கதவைத் திறந்தேன். அங்கே, முத்துப்பல் தெரிய, முந்தாணை நழுவ நின்றுக் கொண்டு இருந்தாள் அவள். எனக்கே தலை சுற்றுவது போல் இருந்தது. நான் என்ன பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறோனோ? என்று நினைத்தேன். அவற்றையெல்லாம் சமாளித்துக்கொண்டு பதிலுக்குச் சி...